< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அமாவாசை சிறப்பு வழிபாடு
|24 Nov 2022 12:34 AM IST
நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி முன்னோா்களுக்கு தர்ப்பணங்களை செய்தனர்.இதைப்போல திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.