திண்டுக்கல்
ஜோத்தாம்பட்டி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
|கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டியில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்தநிலையில் இன்று காலை வாஸ்துபூஜை, கும்ப அலங்காரம், வேதபாராயணம், பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் கோவில் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் விஜயன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன் மற்றும் ஜோத்தாம்பட்டி கிராம மக்கள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.