< Back
மாநில செய்திகள்
பொட்டிரெட்டிபட்டி புதூர்  மகா மாரியம்மன் கோவில் தீமிதி விழா
நாமக்கல்
மாநில செய்திகள்

பொட்டிரெட்டிபட்டி புதூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதி விழா

தினத்தந்தி
|
23 May 2022 9:48 PM IST

பொட்டிரெட்டிபட்டி புதூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதி விழா

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி புதூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 10 மணிக்கு மேல் அலகு குத்தும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் தீமிதி விழாவும் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொங்கல் வைத்தலும், கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது. மாலை 6 மணி நடக்கும் கிராமிய இன்னிசை நிகழ்ச்சியில் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி கலந்து கொள்கின்றனர்.

நாளை (புதன்கிழமை) காலை சிறப்பு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்

மேலும் செய்திகள்