< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
எருமப்பட்டி அருகே அச்சப்பன் கோவிலில் சாட்டையடி திருவிழா
|25 Oct 2023 12:30 AM IST
எருமப்பட்டி அருகே அச்சப்பன் கோவிலில் சாட்டையடி திருவிழா நடந்தது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே பவித்திரம் அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமி அன்று தலையில் தேங்காய் உடைத்தல், பெண்களுக்கு பேய்களை ஓட்டும் சாட்டையடி நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மதியம் சக்தி அழைத்தல், தப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தலும், பேய்களை ஓட்டும் சாட்டியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பவித்திரம், வெள்ளாளப்பட்டி, வாழசிராமணி, வரகூர், கஞ்சம்பட்டி பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி பெற்றனர்.