< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
கஞ்சி கலய ஊர்வலம்
|8 Aug 2023 12:45 AM IST
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புழுகாபேட்டை தெருவில் ஆதிபராசக்தி வர வழிபாட்டு மன்றம் உள்ளது. இந்த மன்றம் சார்பில் ஆண்டு தோறும் உலக நன்மைக்காக ஆடி மாதம் ஆதிபராசக்திக்கு பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து வருவது வழக்கம். இதன்படி கோவிலில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி படத்துடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் கஞ்சி கலயங்களை சுமந்து ெரயில்வே ரோடு, கடைவீதி, வாய்க்கால் கரை தெரு வழியாக கோவிலை அடைந்தனர். பின்னர் பெண்கள் தலையில் சுமந்து வந்த கஞ்சியை அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.