< Back
மாநில செய்திகள்
உமா மகேஸ்வரர்-சிவ பார்வதி திருக்கல்யாணம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

உமா மகேஸ்வரர்-சிவ பார்வதி திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
25 Feb 2023 6:45 PM GMT

உமா மகேஸ்வரர்-சிவ பார்வதி திருக்கல்யாணம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே வெற்றி விநாயகர், குபேரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு உமா மகேஸ்வரர்-சிவ பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர், குபேரபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் வெங்கடேசதீட்சிதர் தலைமையிலான தீட்சிதர் குழுவினர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் கோவில் அறங்காவலர் சம்பந்தம், ஒன்றியக்குழு துணை தலைவர் பானு சேகர், ஊராட்சி மன்ற தலைவர் வசந்திராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்