< Back
மாநில செய்திகள்
முத்து முனீஸ்வரர் கோவிலில் பால்குட திருவிழா
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

முத்து முனீஸ்வரர் கோவிலில் பால்குட திருவிழா

தினத்தந்தி
|
10 Feb 2023 6:45 PM GMT

முத்து முனீஸ்வரர் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.

அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் கிராமத்தில் முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சந்தனக்காப்பு மகோத்சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அய்யம்பேட்டை மதகடி பஜார் குடமுருட்டி ஆற்றில் உற்சவமூர்த்தி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். அதையடுத்து பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், பறவை காவடி, அலகு காவடியுடன் மேள தாளங்கள், வாண வெடிகள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் சூலமங்கலம், அய்யம்பேட்டை, செருமாக்கநல்லூர், அரியமங்கை கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்