< Back
மாநில செய்திகள்
மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா ருத்ர யாகம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா ருத்ர யாகம்

தினத்தந்தி
|
8 Jan 2023 6:45 PM GMT

மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா ருத்ர யாகம் நடந்தது.

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்துவக்குடி காசி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாத சுவாமி கோவில் சிதலமடைந்திருந்தது. இக்கோவில் பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து கோவிலில் 84 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டல பூஜை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் நடந்தது. நேற்று மண்டலபிஷேக பூர்த்தியை முன்னிட்டு மகா ருத்ர யாகம் நடந்தது. அப்போது 30 மூலிகைகள் மற்றும் திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டு உலக நலன் வேண்டி 4 மணி நேரம் மகா ருத்ர யாகம் நடந்தது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடும் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் உபாசகர் நங்கநல்லூர் ரமணி அண்ணா, திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருப்பணி கமிட்டி தலைவரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க. ஸ்டாலின், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், ஊர் நாட்டாண்மைகள் இளங்கோவன், ராஜகோபால், ரவி, பாலகிருஷ்ணன், அசோக்குமார், அண்ணாதுரை, ராஜாங்கம், ராமன், ரமேஷ் மற்றும் சுவாமிநாதன், குமார் அய்யர், சுவாமிநாத சுவாமி, பேரூராட்சி கவுன்சிலர் ம.க.பாலதண்டாயுதம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்