< Back
மாநில செய்திகள்
பால வடரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பால வடரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
1 Oct 2022 6:30 PM GMT

பால வடரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் பால வடரெங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பால வட ரெங்கநாதருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில், தென்பாதி கோதண்டராமர் கோவில், தாடாளன் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்