< Back
மாநில செய்திகள்
6 ஆண்டுகளுக்கு பிறகு  கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

6 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா

தினத்தந்தி
|
7 Aug 2022 4:29 PM GMT

6 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற உள்ளது.

வேதாரண்யம் தாலுகா கள்ளிமேட்டில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடந்தது. இந்த கோவிலில் ஒரு சமூகத்தினர் மண்டகபடி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஆடி திருவிழா நாளை (திங்கட்கிழமை) காப்பு காட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர், கோவில் செயல் அலுவலர் தினேஷ் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கோவில் வளாகம், சாமி வீதி உலா செல்லும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவில் தினமும் உபயதாரர்கள் மண்டகபடி நடத்தி சாமி வீதிஉலா நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி ஆடி கடைசிவெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்