< Back
மாநில செய்திகள்
சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

தினத்தந்தி
|
2 Aug 2022 3:20 PM GMT

சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.

நாகை அருகே சிக்கலில் உள்ள சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று துர்க்கை அம்மன் புறப்பாடு நடந்தது. இன்று சிங்கார காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் செல்லும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) இரவு அம்மன் வெள்ளை உடுத்தி திருநடனத்துடன்‌ கோவிலுக்குள் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்