< Back
மாநில செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா:  புஷ்ப பல்லக்கில் வேதநாயகி அம்மன் வீதி உலா

சந்தனக்காப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன்.

நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா: புஷ்ப பல்லக்கில் வேதநாயகி அம்மன் வீதி உலா

தினத்தந்தி
|
2 Aug 2022 2:06 PM GMT

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவில் புஷ்ப பல்லக்கில் வேதநாயகி அம்மன் வீதி உலா வந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்ட வேதாரண்யத்தில் அமைந்துள்ள இக்கோவில், சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். கோவில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. இங்கு மூலவராக வேதாரண்யேஸ்வரர், வேதநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். தியாகராஜர் புவனி விடங்கராக அருள்பாலிக்கும் தலம் இதுவாகும். இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்று அழைக்கப்படுவது சிறப்பம்சம் ஆகும். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருவிழாவில் வேதநாயகி அம்மன் நாள்தோறும் காமதேனு வாகனம், அன்ன வாகனம், இந்திர விமானம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிடட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல மறைக்காடர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி வேதநாயகி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல கால பைரவர், விநாயகர், முருகன், லட்சுமி, அகத்தியர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்