< Back
மாநில செய்திகள்
காவிரி அம்மன் கோவில் திருவிழா
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

காவிரி அம்மன் கோவில் திருவிழா

தினத்தந்தி
|
23 July 2022 4:39 PM GMT

காவிரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருேக திருவாலங்காடு ஊராட்சி காவிரி நகரில் பழமை வாய்ந்த காவிரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால்குட திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நடந்தது. இதையொட்டி திருவாலங்காடு காவிரி கரையில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம், அலகு காவடிகள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்