< Back
மாநில செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலுக்காக நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட ஆலய மணிகள்
மாநில செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலுக்காக நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட ஆலய மணிகள்

தினத்தந்தி
|
15 Dec 2023 5:58 AM IST

பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர்.

நாமக்கல்,

அயோத்தி ராமர் கோவிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அக்கோவிலுக்காக ஆலய மணிகள் செய்து தருமாறு நாமக்கல்லில் உள்ள நிறுவனத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஆர்டர் கொடுத்துள்ளார்.

அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர். மணிகளை தயார் செய்த தொழிலாளர்கள், தங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்