< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஔவையாருக்கு திருவையாற்றில் கோவில்; தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா
|5 Jun 2022 7:19 PM IST
திருவையாற்றில் ஔவையாருக்கு கோவில் அமைக்கப்பட்டு, தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தமிழகத்திலேயே முதல் முறையாக ஔவையாருக்கு தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் கோவில் அமைக்கப்பட்டு, தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழறிவும், கவித்துவமும் பிறப்பிலேயே வரமாக பெற்ற சங்க கால புலவரான ஔவையாருக்கு கோவில் அமைத்த பெருமையை திருவையாறு பெற்றுள்ளது.
கோவை காமாட்சி பெரிய ஆதினம் சீர்வளர் சீர் தவத்திரு சிவலிங்கேஸ்வர அடிகளார் தலைமையில் ஔவையார் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி நன்னீராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.