< Back
மாநில செய்திகள்
கம்பைநல்லூர் அருகேமாரியம்மன் கோவில் திருவிழா
தர்மபுரி
மாநில செய்திகள்

கம்பைநல்லூர் அருகேமாரியம்மன் கோவில் திருவிழா

தினத்தந்தி
|
11 May 2023 12:30 AM IST

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள பெரிய முருக்கம்பட்டி, சின்ன முருக்கம்பட்டி, பாகல்பட்டி, வெதரம்பட்டி ஆகிய கிராம மக்கள் சேர்ந்து மாரியம்மன், அக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தினர். அக்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்ததுடன், ஆடுகள், கோழிகள் பலியிட்டு வழிப்பட்டனர்.

பின்னர் மாரியம்மன் மற்றும் வேடியப்பன் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு கரகம் எடுத்து மாவிளக்குடன் ஊர்வலம் வந்தனர். இதையடுத்து அக்கு மாரியம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

மேலும் செய்திகள்