< Back
மாநில செய்திகள்
வெண்ணந்தூரில்செல்வ விநாயகர் கோவிவில் சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்
மாநில செய்திகள்

வெண்ணந்தூரில்செல்வ விநாயகர் கோவிவில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
4 May 2023 12:30 AM IST

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் காமராஜர் சிலை பஸ் நிறுத்தம் அருகே தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் குடும்ப விளக்கு விழா நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து 17-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின்னர் விநாயகர் வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்