< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில்மாசி மக திருவிழா
|7 March 2023 12:30 AM IST
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மாசி மக விழாக்குழு சார்பில் மாசி மக திருவிழா நேற்று நடந்தது. கோவிலில் அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன், பன்னீர், தயிர் போன்றவற்றை 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
மாலை அணிந்த பக்தர்கள் திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்டவற்றை தலையில் தாங்கியபடி 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து மலைக்கு சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது சக்தி, சிவன் வேடம் அணிந்த இருவர் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.