< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அதியமான்கோட்டையில்விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
|30 Jan 2023 12:15 AM IST
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை பாரதியார் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மகளிர் ஏற்பாட்டில் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு கங்கணம் கட்டி, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து அதியமான்கோட்டை ஓங்காளியம்மன் கோவிலில் இருந்து கோவில் வரை ஏராளமான பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரியை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பல்வேறு யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு அர்ச்சகர்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.