< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ஆங்கில புத்தாண்டையொட்டிசாய்பாபா கோவிலில் அன்னதானம்ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
|2 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே சாய் தபோவனத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஆரத்தி, புனித தீர்த்த நீராடல், நெய் வேத்தியம், சங்கல்ப பூஜை, சிறப்பு ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிலையில் வியாழக்கிழமைதோறும் நடைபெற்று வந்த அன்னதானம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இதையடுத்து நேற்று மீண்டும் அன்னதானம் தொடங்கியது. இதனை நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். முன்னதாக நடந்த ஆரத்தி விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தொட்டிப்பட்டி சாய்பாபா கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.