< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்
|14 Sept 2022 10:37 PM IST
தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பக்தர்கள் உடலில் அலகுகுத்தி, வாகனங்கள் மற்றும் கிரேன்களில் அந்தரத்தில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல பெண்கள் மாவிளக்கு எடுத்து சென்றனர். திருவிழாவில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.