< Back
மாநில செய்திகள்
பிலிக்கல்பாளையம் அருகே  கருப்பண்ண சாமி கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு
நாமக்கல்
மாநில செய்திகள்

பிலிக்கல்பாளையம் அருகே கருப்பண்ண சாமி கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு

தினத்தந்தி
|
14 Aug 2022 9:09 PM IST

பிலிக்கல்பாளையம் அருகே கருப்பண்ண சாமி கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு

பரமத்திவேலூர்:

பிலிக்கல்பாளையம் அருகே சேளுர் சாணார்பாளையம் கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் செய்து விட்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர். அப்போது கோவிலில் உள்ள இரும்பு உண்டியலின் மேற்பகுதி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உண்டியலில் எவ்வளவு காணிக்கை இருந்தது என்ற விவரம் தெரியவில்லை.

இதேபோல் சேளுர் சாணார்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 47 அடி உயரமுள்ள முனியப்பன் கோவில் உண்டியலையும் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த உண்டியலை உடைக்க முடியாதததால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கோவில் முன்பு இருந்த வேல் ஒன்றை உடைத்து விட்டு சென்றனர். ஒரே நாளில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்