< Back
மாநில செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே  3 கோவில்களில் பூட்டை உடைத்து    நகை-பணம் கொள்ளை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

தினத்தந்தி
|
21 July 2022 6:34 PM GMT

வேப்பனப்பள்ளி அருகே 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 கோவில்கள்

வேப்பனப்பள்ளி அருகே பெரிய தமண்டரப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், மாரியம்மன் கோவில், படேஸ்வரம்மா சாமி கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் கோவில்களை பூசாரிகள் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

பின்னர் நேற்று காலை லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலுக்கு பூசாரி வந்தார். அங்கு கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதேநேரத்தில் ஊருக்குள் இருந்த மாரியம்மன் மற்றும் படேஸ்வரம்மா சாமி கோவிலிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 3 கோவில்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நகை-பணம் கொள்ளை

அப்போது 3 கோவில்களிலும் சுமார் 4 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி, 5 கிலோ வெண்கலம், மற்றும் ரூ.25 ஆயிரம் உண்டியல் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரிய தமண்டரப்பள்ளி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்