< Back
மாநில செய்திகள்
சதுர்த்தியையொட்டிசெல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

சதுர்த்தியையொட்டிசெல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
19 Sept 2023 12:30 AM IST

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அதன்படி நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், திருமஞ்சள், இளநீர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் விநாயகர் வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர், காயத்ரி தேவியுடன் பிரமாண்ட விநாயகர் சிலையும், 18 ரிஷிகளுடன் மகாலட்சுமி மடியில் ஸ்ரீவித்யா கணபதி இருப்பது போன்றும் சிலை அமைப்புகள் வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில், நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்