< Back
மாநில செய்திகள்
அரூர்ஓம் ஆதிபராசக்தி கோவில் ஆடித்திருவிழா
தர்மபுரி
மாநில செய்திகள்

அரூர்ஓம் ஆதிபராசக்தி கோவில் ஆடித்திருவிழா

தினத்தந்தி
|
5 Aug 2023 12:30 AM IST

அரூர்:

அரூர் மேல்பாட்ஷா பேட்டை ஓம் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடித்திருவிழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான செவ்வாடை அணிந்த பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்