< Back
மாநில செய்திகள்
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலில்ஆடிப்பெருக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலில்ஆடிப்பெருக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தினத்தந்தி
|
1 Aug 2023 12:45 AM IST

சேந்தமங்கலம்:

கொல்லிமலை ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சி பெரிய கோவிலூரில் உள்ள வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்புள்ள கொடி கம்பத்தில் அர்ச்சகர்கள் நேற்று காலை கொடியேற்றினர்.

நாளை (புதன்கிழமை) காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், உள்பிரகாரம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி, மாலை திருக்கல்யாண உற்சவம், சாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் சோமஸ்கந்தர் பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. இதையடுத்து 4-ந் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருவிழா முடிவடைகிறது.

மேலும் செய்திகள்