தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்... வானிலை மையம் தகவல்
|தமிழகத்தில் வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பதால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது.
மேலும், சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள், நுங்கு, இளநீர், தர்பூசணி மற்றும் ஜூஸ் கடைகளில் அதிக அளவில் கூடுவதை காணமுடிகிறது.
இந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. இயல்பு நிலையிலிருந்து வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.