< Back
மாநில செய்திகள்
மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமனம் -  தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து
மாநில செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமனம் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து

தினத்தந்தி
|
6 July 2022 10:30 PM IST

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " கிராமிய இசையையும்,ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும்,தமிழருக்கும் பெருமை....

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இசைஞானி இளையராஜா அவர்களின் இணையற்ற இசைக்கு இசைந்து அங்கீகாரம் கொடுத்து தமிழ்நாட்டின் இசைக்குரலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிக்கச்செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்