< Back
மாநில செய்திகள்
தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Aug 2023 2:36 PM IST

தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை

தேஜஸ் விரைவு ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டுவருகிறது. இது தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வருகிறது. இதை தொடர்ந்து தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்