< Back
மாநில செய்திகள்
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் - தமிழக அரசு தகவல்
மாநில செய்திகள்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் - தமிழக அரசு தகவல்

தினத்தந்தி
|
26 Sept 2023 9:14 PM IST

வழக்கின் குற்றப்பத்திரிக்கையும், விசாரணை அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். மற்றும் நெல்லை சார் ஆட்சியர் ஆகியோர் நடத்திய விசாரணையின் அறிக்கைகளை வழங்க வேண்டும் என அருண்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையும், விசாரணை அறிக்கையும் கோர்ட்டில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 16-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


மேலும் செய்திகள்