< Back
மாநில செய்திகள்
யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்; வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
மாநில செய்திகள்

யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்; வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தினத்தந்தி
|
7 Oct 2022 12:18 PM IST

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

சேலம்

சேலம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் கடந்த ஜூன் 20ந்தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர் அவர்களிடமிகுந்து துப்பாக்கி, கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்ற அந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், துப்பாக்கி தயாரிக்க அவர்களுக்கு உதவிய கபிலர் என்ற நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் பின்னர் இந்த வழக்கு என் ஐ ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

அங்கிருந்த பொருட்களை எடுத்து சோதனை நடத்திய அதிகாரிகள் பின்னர், சேலம் சன்னியாசிகுண்டு எருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்