< Back
மாநில செய்திகள்
தொழிலாளியின் கையை வெட்டி எடுத்துச்சென்ற வாலிபர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

தொழிலாளியின் கையை வெட்டி எடுத்துச்சென்ற வாலிபர்கள்

தினத்தந்தி
|
20 Jun 2022 1:14 AM IST

தொழிலாளியின் கையை வெட்டி வாலிபர்கள் எடுத்துச்சென்றனர்.

திருச்சி:

முன்விரோதம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது 48). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜய்(25), ஹரி(25) ஆகியோருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

ஹரி, விஜய் ஆகியோர் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ேபாலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பதால், அவர்கள் தலைமறைவாக வெளியூரில் இருந்து வந்தனர்.

துண்டான கை

இந்த நிலையில் திடீரென்று நேற்று அதிகாலை ஹரி மற்றும் விஜய் ஆகியோர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த ராமுவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமுவை வெட்ட முயன்றனர். இதனால் உயிருக்கு பயந்து ராமு ஓடத்தொடங்கினார். அவர்கள் 2 பேரும் அவரை துரத்தினர்.

நீண்ட தூரம் ராமு ஓடியும் விடாமல் துரத்தி வந்த அவர்கள், சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் ராமுவை மடக்கி பிடித்து அரிவாளால் வெட்டினர். அப்போது ராமு அரிவாளை ைகயால் தடுக்க முயன்றார். இதில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ராமுவின் இடது கை துண்டானது. இதையடுத்து அந்த கையை ஹரி, விஜய் ஆகியோர் எடுத்துச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து ராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் முன்விரோதம் காரணமாக ராமுவின் கையை விஜய், ஹரி ஆகியோர் வெட்டிக்கொண்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்