< Back
மாநில செய்திகள்
இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது
சென்னை
மாநில செய்திகள்

இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
10 Aug 2022 3:59 PM IST

சென்னை அருகே இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் 18-வது தெருவைச் சேர்ந்தவர் விஜய் (வயது 21). இவர், பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், இளம்பெண் ஒருவர் வீட்டில் குளிக்கும்போது அவருக்கே தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை, இளம்பெண்ணின் அண்ணனுக்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி பெரும்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்