கோயம்புத்தூர்
வாலிபருக்கு கத்திக்குத்து; ெதாழிலாளிக்கு வலைவீச்சு
|வாலிபருக்கு கத்திக்குத்து; ெதாழிலாளிக்கு வலைவீச்சு
கணபதி
கணபதி அருகே ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் லேத் கம்பெனியில் பணிபுரிந்து வருபவர் சைலேந்தர்(வயது 31). அவருடன், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்திரன்(35) என்பவரும் அதே கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த சந்திரன், கம்பெனி உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தார். அவரை சைலேந்தர் சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கம்பெனி உரிமையாளரை குத்த முயன்றார். அதை தடுக்க முயன்ற சைலேந்தருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்ேபரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.