< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து
|17 Aug 2022 1:43 AM IST
சேலத்தில் கோவில் விழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. இதில் நடனமாடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அசோக்குமார் (வயது 25) என்பவரை மற்றொரு தரப்பை சேர்ந்த 3 பேர் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் (22), வினோத்குமார் மற்றும் சிறுவன் என 3 பேரை கைது செய்தனர். இதேபோன்று மற்றொரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அசோக்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.