செங்கல்பட்டு
கார் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்
|கார் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெரித் (வயது 35). இவர் சிறுசேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணி முடிந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செம்மஞ்சேரி பெருமாள் கோவில் அருகே சென்றபோது அவருக்கு முன்னதாக ஒரு கார் ஒன்று வலது புறம் திரும்பியுள்ளது. வேகமாக ஜெரித் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் ஜெரித் தூக்கி வீசப்பட்டு இடது கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். இது பற்றி தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த ஜெரித்தை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த கார் டிரைவர் பத்மராஜிடம் விசாரித்து வருகின்றனர்.