< Back
மாநில செய்திகள்
டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

தினத்தந்தி
|
7 Oct 2023 1:54 PM IST

திருமுடிவாக்கம் சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணியரசன்(வயது 33). படப்பை அடுத்த பனப்பாக்கம் பகுதியில் மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். இவர், சென்னையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுனத்தில் பணி செய்து வந்தார்.

நேற்று மதியம் திருநீர்மலை திருமுடிவாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அது மேல் மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை வலது புறமாக திருப்பினார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் தலை, கால், கைகளில் பலத்த காயமடைந்த மணியரசன், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ராஜா(43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்