கிருஷ்ணகிரி
கார் கவிழ்ந்து வாலிபர் பலி
|பர்கூர்:-
பர்கூர் அருகே நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற போது கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
நண்பரின் பிறந்த நாள்
கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாதிக் (வயது 20). இவருடைய பிறந்த நாளை கொண்டாட நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு அவருடைய நண்பர்கள் பெத்ததாளப்பள்ளி சுகைல் (21). பழைய பேட்டை பகுதியை சேர்ந்த அக்பர் (19), முகமது (19), ஜாமீர் (19) ஆகிய 5 பேரும் காரில் சென்றனர். காரை சாதிக் ஓட்டினார்.
இவர்கள் சென்ற கார், பர்கூர் அருகே கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அருகே தனியார் மண்டபம் அருகில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றது.
பலி
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் சுகைல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது உடலை மீட்டு கந்திகுப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 4 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.