< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சேலத்தில்செல்போன் பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 மாதம் சிறை
|22 Jan 2023 1:14 AM IST
சேலத்தில் செல்போன் பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அன்னதானப்பட்டி,
சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் 26-ந் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரதாப் (32) என்பவர் ஹேமந்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரதாப்புக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி யுவராஜ் தீர்ப்பு கூறினார்.