< Back
மாநில செய்திகள்
நண்பர்களுடன் சுற்றுவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் சோகம்
சென்னை
மாநில செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் சோகம்

தினத்தந்தி
|
19 July 2022 9:18 AM IST

நண்பர்களுடன் சுற்றுவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சஞ்சய் காந்தி காலனி இ.வி.கே. சம்பத் தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 25). இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. கவுதம் நேற்று நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். திருமணத்துக்கு பின்பும் நண்பர்களுடன் இவர் சுற்றித்திரிவதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த கவுதம், தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்