திருவள்ளூர்
சோழவரம் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
|சோழவரம் ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஏரியில் மூழ்கினார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள தேவனேரி கிராமம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் நேற்று முன்தினம் சோழவரம் ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளித்து கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். ஏரியில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.
பிணமாக மீட்பு
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஏரியின் பல்வேறு பகுதிகளில் சுரேஷை தேடினர். இருப்பினும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்தி விட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் தேடும்போது சுரேஷ் பிணமாக மீட்கப்பட்டார். சோழவரம் போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.