< Back
மாநில செய்திகள்
விபத்தில் வாலிபர் சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் கே.பாண்டியாபுரத்தை சேர்ந்த முனியாண்டி மகன் சங்கர்(வயது 39). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி முத்துலட்சுமியுடன் தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கூட்டம்புளியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வரும்போது எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துலட்சுமி காயமைடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்