< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
விபத்தில் வாலிபர் சாவு
|21 Dec 2022 1:58 AM IST
திருப்பத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் சென்ற போது காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருப்பத்தூர்,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நாகுடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 70). இவர் நேற்று மருத்துவ சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளார். திருப்பத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் சென்ற போது காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மேலும் காரில் வந்த பழனிவேல், அறந்தாங்கி தொண்டைமான் ஏந்தலை சேர்ந்த டிரைவர் சதீஷ்கான் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து நாச்சியாபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.