< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: மின்வாரிய அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: மின்வாரிய அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

தினத்தந்தி
|
3 Nov 2022 12:57 AM IST

நெல்லையில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் பாலமூர்த்தி (வயது 22). இவர் சம்பவத்தன்று மாடியில் துணியை காயப்போட சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த நிலையில் பாலமூர்த்தியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சிலர் மகாராஜநகரில் உள்ள தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், அதிக திறன் கொண்ட மின்ஒயர் வீட்டின் மேல் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சென்றதாலேயே இந்த விபத்து நடந்துள்ளது. எனவே அஜாக்கிரதையாக செயல்பட்ட மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பெருமாள்புரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்