< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
2 July 2023 3:48 PM IST

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சன்னியாசி. கொத்தனார். இவரது மகன் கார்த்திக் (வயது 22), செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கார்த்திக்கின் வீட்டின் பின் பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது.

கார்த்திக் வழக்கம் போல் பணி முடித்து வீடு திரும்பிய பிறகு வீட்டின் பின் புறத்தில் கை, கால்களை கழுவி விட்டு வீட்டுக்குள் வரும்போது மின் வயரை மிதித்துள்ளார். இதில் கார்த்திக் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

தொடர்ந்து மயங்கிய நிலையில் விழுந்த கார்த்திகை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்