< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
26 Jan 2023 12:15 AM IST

நாகர்கோவிலில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கோட்டார்:

நாகர்கோவிலில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை சானல் கரை பகுதியில் ஒரு பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் ஒடிசாவை சேர்ந்த தீபக் (வயது 27) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தீபக் வேலை முடிந்த பிறகு கடையிலேயே செல்போனுக்கு மின் இணைப்பில் இணைத்து சார்ஜ் போட்டதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தீபக்கை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்