திருவாரூர்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
|நீடாமங்கலம் அருகே மளிகை கடையில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே மளிகை கடையில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
சுத்தம் செய்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் சர்வமான்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் சிவக்குமார்(வயது21). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் நீடாமங்கலத்தில் உள்ள மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். ஆயுதபூஜைக்காக நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்த, மின்விசிறியை சிவக்குமார் துடைத்தார்.
பரிதாப சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேேய சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.