< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
|24 Nov 2022 10:20 AM IST
ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் ஏகாம்பர சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 21). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவினாஷ் வேலை முடிந்து அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்துக்கு மின்சார ரெயிலில் வந்து இறங்கினார்.
பின்னர் அவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவினாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.