< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
பஸ் மோதி வாலிபர் சாவு
|18 Sept 2023 10:09 PM IST
ஆரணி அருகே பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் மணிகண்ட பிரபு (வயது 26), கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை மணிகண்ட பிரபு ஓட்டி பார்ப்பதற்காக எடுத்து சென்றார்.
வாழைப்பந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாழைப்பந்தலில் இருந்து ஆரணி நோக்கி வந்த தனியார் பஸ் மணிகண்ட பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.