< Back
மாநில செய்திகள்
குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை: விஷம் குடித்த மனைவியும் சாவு
திருச்சி
மாநில செய்திகள்

குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை: விஷம் குடித்த மனைவியும் சாவு

தினத்தந்தி
|
10 Nov 2022 1:47 AM IST

குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே விஷம் குடித்த மனைவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே விஷம் குடித்த மனைவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

குடும்ப பிரச்சினை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 34). இவரது மனைவி சகுந்தலா(30). இவருக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். சிவராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் விவசாய தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சிவராஜ் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோ்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மீதமிருந்த விஷத்தை குடித்த மனைவி

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சகுந்தலா கணவர் குடித்து விட்டு மீதம் வைத்திருந்த விஷத்தை திடீரென குடித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் பதறியடித்து சகுந்தலாவை சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சகுந்தலாவின் சகோதரர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்